Monday, 21 March 2016

நாட்டுப்புற இலக்கியங்களின் செல்வாக்கு

இருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்புமற்ற எழுச்சிப் பாடல்களை இயற்றித் தமிழை வளப்படுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். அரசியல் பற்றி அதிகம் எண்ணாமல் சமுதாய உயர்வு பற்றி எண்ணியவர் பாரதிதாசன். 
சமுதாயத்தைப் பற்றி எண்ணாத இலக்கியங்களால் மக்கள் பெறும் பயன் குறைவு எனலாம். தங்கக் கோபுரத்தில் ஏறித் தாழிட்டுக் கொள்ளும் தங்களை மறந்த மனிதர்கள் அவற்றின் உரிமையாளர்கள். கண்ணையும் கருத்தையும் கற்பனையிலும் கனவுலகிலும் உலவவிட்டுத் தங்களைச் சமுதாயத்தினின்றும், ஒதுக்கிக் கொள்கிறவர்கள் அவர்கள்.பாரதிதாசன் இவ்வகையினரைச் சார்ந்தவர் அல்லர். ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றை வளர்த்தும் பயன்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே. ஆகையால் அதுவே மனிதர்கள் வாழ்வைப் பெரிதும் மாற்றி அமைப்பது என்பதில் அவர் உறுதி கொண்டவர் என்பார் கூற்று பாவேந்தரை இனம் காண உதவுகிறது. இவரது பாடல்களில் நாட்டுப் புற இலக்கியத்தின் கூறுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து காண்பது இக்கட்டுரை.நாட்டுப்புற இலக்கியம்வரலாற்றுக்கும் எட்டாத மிகப் பன்னெடுங் காலமாகவே நாட்டுப்புறப் பாடல்கள் தமிழகத்தில் பட்டிதொட்டிகளில் எல்லாம் வழங்கி வந்துள்ளன. அற இலக்கியங்களுள் கதை இலக்கியங்களுள் அறிஞரிடையே மதிப்புப் பெற்றுள்ளதைப் போன்று நாட்டுப்புற மக்களுக்குப் பயன் தரும் சமுதாய இலக்கியமாக விளங்கியமையால் இவை நாட்டுப்புற இலக்கியம் என்னும் பெயரைப் பெற்றன.வழிவழியாக வளர்ப்பமை குன்றா எழிலுடன் இலங்குவது நாட்டுப்புற இலக்கியம். இது என்று தோன்றியது என எண்ணற்கியலாப் பழமையுடையது. பண்டு முதல் இன்று வரையிலான ஏட்டிலக்கியச் செழுமைக்கும் இவ்விலக்கியப் பேழையின் இடைத் தொடர்பு காரணம் எனில் அது மிகையாகாது என்பார் கூற்று இதனை வலியுறுத்தும்.நாட்டுப்புற இலக்கியம் ஏட்டிலக்கியத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளதைத் தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்3 அறிந்தோ அறியாமலோ ஒரு ஆசிரியனால் இரவல் வாங்கப்பட்ட கருத்துக்களால் தூண்டப்பட்டுதான் இலக்கிய வளர்ச்சியே ஏற்படுகிறது என்பர். இக்கருத்திற்கு கால முதல் ஏட்டிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்ததைக் காணமுடிகிறது.நாட்டுப் புறப்பாடல் கூறுகளாக நம்பிக்கை, திரும்பத் திரும்ப வருதல், பழமொழிகள் சடங்குகள், சுட்டி ஒருவர்ப் பெயர் கூறா மரபு. புராண மரபுச் செய்திகள், விடுகதைப் பாங்கு, பேச்சு வழக்குச் சொற்கள் ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.இங்குக் குறிப்பிட்ட இலக்கியக் கூறுகள் பாரதிதாசன் பாடல்களில் உடன்பாட்டிலோ எதிர்மறையிலோ இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.நம்பிக்கைநாட்டுப்புறப் பாடல்களில் இன்றியமையாத கூறு நம்பிக்கை. பண்டையக் காலம் முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழ்ந்து வருகிறான். இயற்கை மாறுதலுக்கேற்ப மனித மனமும் மாறுபடுகிறது. இயற்கையோடியைந்த மனித வாழ்வில் நம்பிக்கைகள் தோன்றலாயின.நம்பிக்கைகளில் முதன்மை பெறுவது தெய்வ நம்பிக்கை நாட்டில் மழை பெய்வது நாடு செழிக்க வேண்டுமானால் மாரியம்மனின் அருள் வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடையே பலமாக இருந்தது. மாரியை வேண்டி வரங்கிடந்தமையாலோ என்னவோ அவளுக்கே மாரி என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. நாட்டில் உண்டாக்கும் அம்மை முதலான நோய்களுக்கும் மாரியம்மனே காரணம் என நம்பினர். மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்துவந்தனர். மாரிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனைச் செலுத்தாவிட்டால் பல குற்றங்கள் நேரும் என நம்பினர்.ஆரு கடன் நின்றாலும் 
மாரி கடன் ஆகாது 
மாரிகடன் தீர்ந்தவர்க்கு 
மனக்கவலை தீருமம்மாஎன்பது போன்ற பாடல்களில் இதைக் காணலாம்.ஓர் கடவுள் உண்டு - தம்பி 
உண்மை கண்ட நாட்டில் 
உள்ள தொரு தெய்வம் - அதற்கு 
உருவமில்லை தம்பி!5என்று இவர் பாடுவதில் தொடக்க காலத்தில் இவர் தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்தார் என்று கருதலாம்.திரும்பத் திரும்ப வருதல்பாடல்களில் சொற்கள் மீண்டும் மீண்டும் வரப்பாடுவது நாட்டுப்புற இலக்கியத்தின் கூறு. இது உலக நாட்டுப் புற இலக்கியங்கள் அனைத்திலும் காணப்படும் பொதுவான பண்பு என்பர்.6ஒரே அடியிலோ அடுத்தடுத்த அடியிலோ வந்த சொல் அல்லது சொற்றொடர் திரும்பத் திரும்ப வந்தால் அதனைத் தொடர்ந்து வரல் (Continious) என்றும் ஒரு அடி விட்டு அடுத்த அடியிலோ அல்லது ஒவ்வொரு பத்தியின் இறுதியிலோ வந்தால் விட்டு வரல் (Un Continious) என்றும் இத்தொடர்ந்து வரல் பண்பு இருவகைப்படும்.காட்டை அழிப்பதும் கூடும்-அலை 
கடலையும் தூர்ப்பது கூடும் 
மேட்டை அகழ்வதும் கூடும்-விரி 
விண்ணை அளப்பதும் கூடும்.என்ற நாட்டுப் புறப்பாடலில் 'கூடும்' என்ற தனிச்சொல் அடி தொறும் மீண்டும் மீண்டும் வருகின்றது.தமிழுக்கு அழுதென்று பேர்! - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! 
தமிழுக்கு நில வென்று பேர்! இன்பத் 
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் 
தமிழுக்கு மண மென்று பேர்!......இன்பத் 
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! 
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் 
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!7.என்ற பாவேந்தர் பாடலில் இதைக் காணலாம்.பேச்சு வழக்குநாட்டுப்புற இலக்கியப் பாடல்களில் கொச்சைச் சொற்கள் அதாவது மக்கள் உலக வழக்கில் பேசிக் கொள்ளும் சொற்கள் நிறைய இடம் பெறுவது வழக்குபம்பப் புளிய மரம் 
பந்தடிக்கும் நந்தவனம் 
பந்தடிச்சி வீடுவந்தா 
பச்சத் தண்ணி யார் தருவா?கடன் வாங்கிச் சோறு தின்னா 
கங்காரன் நச்சரிப் பான்! 
கண்கலங்கி நிக்கையிலே 
கண்ட சனம் பேசுமய்யா!என்ற நாட்டுப்பாடலில், பந்தடிச்சி, பச்சத் தண்­, தருவா, தின்னா, நிக்கையிலே என்னும் கொச்சைத் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைப் போன்றே பாவேந்தர் பாடல்கள் சிலவற்றில் கொச்சை வழக்குச் சொற்களைக் காணலாம்.எண்ணா கெழவா! 
பொடிய னெங்கே? இங்கேவா! 
கன்னா பின்னான்று 
கத்துறியே என்னாது? 
மாடவுளை மேய்க்கவுடு 
மாந்தோப்பில் ஆடவுடு 
காடுவுளே சுத்தவுடு 
கல்வி சொல்லித் தாராதே!6பழமொழிகள்நாட்டுப்புற மக்களின் எழுதா இலக்கியங்களாக அமைபவை பழமொழிகள். தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துக் கூறுமளவுக்கு அவர் காலத்தில் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன பழமொழிகள். பழமொழிகளை முதுமொழிகள் என்பர் அவர்.நுட்பமான கருத்துக்கள், சுருங்கிய வடிவம், தெளிவான பொருள் விளக்கம், எளிமை, ஆகியவற்றைப் பெற்று குறித்த பொருள்களை விளக்குவதற்கு வருவன பழமொழிகள் என்பது தொல்காப்பியர் வகுக்கும் இலக்கணம்.நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும் 
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் 
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் 
ஏது நுதலிய முதுமொழி என்ப9என்பது அவர் நூற்பா,கள்ளனை நம்பினாலும் 
குள்ளனை நம்பிடாதே!ஆக்கப் பொறுத்தவன் 
ஆறப் பொறுக்கலாகாதா?என்பன சமுதாயச் தொடர்புடைய பழமொழிகள்.இதனை குள்ளர் வழிச் சென்று-நீ 
குழியில் விழ வேண்டாம் என்பர்.உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பது பழமொழி.உப்பிட்டாரை உள்ளளவும் மறவாள் என்பது பாவேந்தர் கூற்று. இவ்வாறு பல பழமொழிகள் ஆட்சிப் பெற்றுள்ளதை காணலாம்.தாலாட்டுநாட்டுப்புறப் பாடலில் தாய்மை இலக்கியமாக அமைவது தாலாட்டு தாய் தன் மன உணர்வுளைத் தாலாட்டில் வடிக்கிறாள். குழந்தை உறங்குவதற்கும் தன் பிறந்தகத்துப் பெருமையும் தாய் பாடும் தாலாட்டின் நோக்கமாக அமைகின்றன.பாவேந்தர் தனத கவிதைத் தொகுப்பில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என இரு தாலாட்டுகளைப் பாடுகின்றார். பாவேந்தர் தாலாட்டுகளை தமது கொள்கையைப் பரப்பிப் பயன்படுத்தியுள்ளார்.ஆண் குழந்தைத் தாலாட்டில்1. வடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும் 
மூடப்பழக்கத்தைத் தீதென்றாய் முட்டவரும் 
மாடுகளைச் சீர் திருத்தி வண்டியிலே பூட்டவந்த 
ஈடற்ற கோளா! இளந்தோளா! கண்ணுறங்கு! எனப்பாடுகிறார்.பெண் குழந்தைக்குமூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற 
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமேஎன்று பாடிப் பகுத்தறிவுப் பாலை ஊட்டுகிறார்